ஒரே வாரத்தில் ரூ. 81 கோடி வசூல் ஈட்டிய ‘ஆல்பா’

நடிகை ஆலியா பட் நடிப்பில் வெளியான ‘ஆல்பா’ திரைப்படத்தின் முதல் வார வசூல் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் முன்னணி நடிகை ஆலியா பட் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ஆல்பா. இயக்குனர் ஷிவ் ராவைல் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் பாபி தியோல், அனில் கபூர் மற்றும் ஷர்வரி வாக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யாஷ் ராஜ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஜூலை 3 ஆம் தேதி வெளியானது. இப்படம் இந்தி மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

ஆக்சன் திரைப்படமான ஆல்ஃபா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் ஆல்ஃபா திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் உலகளவில் ரூ.81.51 கோடி வரை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.