“தமிழ்நாட்டில் அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

தமிழ்நாட்டில் அனைத்து பேருந்துகளின் படிகட்டுகளிலும் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.   தமிழ்நாட்டில் பள்ளி நேரத்தை கணக்கில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற பொது வெளியில்…

தமிழ்நாட்டில் அனைத்து பேருந்துகளின் படிகட்டுகளிலும் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  

தமிழ்நாட்டில் பள்ளி நேரத்தை கணக்கில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற பொது வெளியில் பதிவான கோரிக்கையை கடந்த 2013 ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது.  இதன்  விசாரணை இன்று நடைபெற்றது.

இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பேருந்துகளில்,  எத்தனை பேருந்துகளில் படிகட்டுகளில் தானியங்கி கதவு பொருத்தப்பட்டு உள்ளது? எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்படாமல் உள்ளது? என்பது குறித்து தமிழக உள் துறை செயலாளர்,  போக்குவரத்து துறை செயலாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

இளைஞர்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் அரசு,  தனியார் பேருந்துகளில் படிகட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில் அனைத்து பேருந்துகளின் படிகட்டுகளிலும் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.