குருபெயர்ச்சி விழா எப்போது? ஆலங்குடி கோயில் நிர்வாகம் விளக்கம்!

ஆலங்குடி குருபகவான் கோயிலில் 2024-ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி விழா மே 1 ம் தேதி நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி கிராமத்தில் நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும்…

ஆலங்குடி குருபகவான் கோயிலில் 2024-ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி விழா மே 1 ம் தேதி நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி கிராமத்தில் நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயில் உள்ளது.
சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையும் நாளில் குருப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்தாண்டு குருபகவான் வரும் மே 1 ம் தேதி மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி அடைவதை,  முன்னிட்டு அன்றையதினம் ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறவுள்ளது.  இதனை முன்னிட்டு ஏப்ரல் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை லட்சார்ச்சனை விழா நடைபெறும்.

குருப்பெயர்ச்சிக்குப்பின் மீண்டும் மே மாதம் 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை இரண்டாவது கட்டமாக லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது.  இந்த லட்சார்ச்சனை காலை 9.30 முதல் 12 மணி வரையிலும்,  மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் நடைபெறும்.  லட்சார்ச்சனையின் கட்டணம் 400 ரூபாய் எனவும்,  லட்சார்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்படும் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.