அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு | 7வது சுற்றில் 5 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 7 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் அதன் விவரங்களைக் காணலாம்.

தமிழர்களின் பாரம்பரியம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைத்திருநாளில் நடைபெறுவது வழக்கம். அதிலும், குறிப்பாக மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடைபெறும். நேற்று முன்தினம் (ஜன.14) அவனியாபுரத்திலும், நேற்று (ஜன. 15) பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், மதுரை அலங்காநல்லூரில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன. 16) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியினை இன்று காலை 7 மணியளவில் போட்டியை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அலங்காநல்லூர் கோயில் காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன.

 தமிழ்செல்வம்,            பாண்டித்துரை,                           சிவக்குமார்

இதுவரை 7 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. 7வது சுற்றில் 5 வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

7ம் சுற்று முடிவில்:

களம் கண்ட காளைகள் : 94

பிடிபட்ட காளைகள் : 23
(மொத்தம்: 155)

       அய்யனார்,                                           நதீன்குமார்

இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற வீரர்கள் : 5 பேர்

தமிழ்செல்வம், மேலமடை (GY 332) – 7 காளைகள்

பாண்டித்துரை, கருப்பாயூரணி (GY 336) – 3 காளைகள்

சிவக்குமார், இளமனூர் (GY 335) – 2 காளைகள்

அய்யனார், பூதக்குடி (GY 343) – 2 காளைகள்

நதீன்குமார், சின்ன இலந்தைகுளம் (GY 313) – 2 காளைகள்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.