அஜித்தின் தாயார் மறைவு : எஸ். ஏ. சந்திரசேகர் இரங்கல்…!

நடிகர் அஜித்தின் தாயார் மறைவுக்கு இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி (85) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அஜித்குமார் தாயாரின் இறுதி சடங்கு நாளை காலை 8:30 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் அஜித்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: நமது கண்ணெதிரே வாழ்கின்ற தெய்வத்தை இழந்து விட்டு ஆறுதல் கூற முடியாத நிலையில் இருக்கும் அஜித் குமார் அவர்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.