அஜித்குமார் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நடிகர் அஜித்குமார் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அவர் அடுத்ததாக…

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் அஜித்குமார் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அவர் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்துள்ளார்.  ‘குட் பேட் அக்லி’ என தலைப்பிடப்பட்ட இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தில் மூன்று வேடங்களில் நடிகர் அஜித் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே நடிகர் அஜித்குமார் நடிக்கும் ‘Good Bad Ugly’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களில் கனவத்தை பெற்றது. இந்த திரைப்படம் 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், வெளிநாடுகள் என பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.