சென்னை உட்பட 8 நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவை தொடங்கியது – வாடிக்கையாளர்கள் குஷி

சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் ஏர்டெல் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதாகவும், டேட்டா வேகம் 30 மடங்கு அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், அதன்…

சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் ஏர்டெல் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதாகவும், டேட்டா வேகம் 30 மடங்கு அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், அதன் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. இன்று அதன் திட்டங்களை அறிவித்துள்ளது. முதல் கட்டமாக 8 நகரங்களுக்கு 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. அதன்படி டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய 8 நகரங்களில் முதல் கட்டமாக 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

 

ரிலையன்ஸ் ஜியோ கூறியதை விட ஏர்டெல் நிறுவனம் தனது 5ஜி சேவைகளை அதிக நகரங்களில் அறிவித்துள்ளது. ஏற்கனவே 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எந்தவொரு ஏர்டெல் வாடிக்கையாளருமே, ஏர்டெல் 5ஜி பிளஸை பயன்படுத்த முடியும். இதற்காக பயனர்கள் உறுதி செய்ய வேண்டிய விஷயங்கள் என்னவென்றால், அவர்களிடம் 5ஜி-எனேபிள்டு ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும் மற்றும் அது ஏர்டெல்-இன் 5ஜி-யை ஆதரிக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்து 5ஜி ஸ்மார்ட்போன்களுமே ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜியை ஆதரிக்குமா என்று கேட்டால் தற்போது வரையிலாக இல்லை என கூறப்படுகிறது. எல்லா 5ஜி போன்களுமே ஏர்டெல் 5ஜி-ஐ ஆதரிக்க வேண்டுமானால், அதற்கு OEM-களின், அதாவது Original Equipment Manufacturer-களின், இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மொபைல் போன் உற்பத்தியாளர்களின் உதவி தேவைப்படும்.


மொபைல் போன் உற்பத்தியாளர்கள் (OEM) தத்தம் 5ஜி போன்கள் ஆனது டெலிகாம் நிறுவனங்களின் 5ஜி சேவைகளை ஆதரிக்க, அது தொடர்பான OTA (Over the air) அப்டேட்களை வெளியிட வேண்டும். அதன் பின்னரே, ஏற்கனவே ஒரு 4ஜி சிம் காரட்டை வைத்திருக்கும் பயனர்கள், ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி பிளஸ் சேவைகளை பயன்படுத்த முடியும். ஏர்டெல் நிறுவனம் 5G திட்டங்களின் விலைகளை இன்னும் உறுதி செய்யவில்லை. அது தொடர்பான விவரங்கள் “அடுத்த சில நாட்களில்” வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

 

-இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.