ஏர் இந்தியா நிறுவனம், புதிய பிராண்ட் அடையாளத்தையும் புதிய விமான லைவரியையும் வெளியிட்டது.
பிரபல டாடா நிறுவனத்தின் ஆதரவு பெற்ற ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் தனது புதிய பிராண்ட் அடையாளத்தை பெற்றுள்ளது. சிவப்பு மற்றும் ஊதா நிறங்கள் புதிய லோகோவின் ஒரு பகுதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியாவில் புதிய லோகோ மற்றும் விமான டிசைன் மக்கள் மத்தியில் கவவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், புதிய தலைமை, புதிய பிராண்டின் கீழ் சிறப்பான வாடிக்கையாளர் சேவை தரத்துடன், உரிய நேரத்தில் விமானம் இயங்குவது போன்ற அடிப்படையை சரி செய்தாலே போதும் என பலரும் கூறிவருகின்றனர்.
அதன்படி, ஏர் இந்தியா நிறுவனம் 70 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனத்திடம் இருந்து 470 புதிய விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.







