அகமதாபாத்தில் ஏர் இந்தியாவின் பயணிகள் விமானம் விழுந்து விபத்து… 242 பேரின் நிலை என்ன?

குஜராத்தின் அகமதாபாத்தில் ஏர் இந்தியாவின் பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. 

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மேகனி நகரில் ஏர் இந்தியாவின் பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில வினாடிகளிலேயே, அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானது.

அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு சென்ற விமானம் என தகவல் வெளியாகி உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. விபத்துக்குள்ளான விமானம் ஏர் இந்தியா Al 171 எனவும், இந்த விமானத்தில் மொத்தம் 242 பேர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

விபத்தை தொடர்ந்து அப்பகுதியில் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் உள்ள அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் விபத்தில் காயமடைந்த மற்றும் உயிரிழந்தவர்களை தூக்கி செல்லும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.