’சார்பட்டா பரம்பரை’ சர்ச்சை: பா.ரஞ்சித்துக்கு அதிமுக நோட்டீஸ்

’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் வரலாற்று நிகழ்வுகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள் ளதாகக் கூறி இயக்குநர் பா.ரஞ்சித், அமேசான் நிறுவனத்துக்கு அதிமுக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன் உட்பட பலர் நடித்துள்ள…

’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் வரலாற்று நிகழ்வுகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள் ளதாகக் கூறி இயக்குநர் பா.ரஞ்சித், அமேசான் நிறுவனத்துக்கு அதிமுக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன் உட்பட பலர் நடித்துள்ள சார்பட்டா பரம்பரை. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. கூடவே சர்ச்சையும் எழுந்துள்ளது. படத்தில் திமுக கொடி, சின்னம் இடம்பெற்றுள்ளதோடு, நெருக்கடி காலகட்டத்தில் திமுகவினரை சிறையில் அடைக்கப்பட்ட காட்சிகளும் படத்தில் இடம்பெற்றது.

இந்நிலையில், இந்தத் திரைப்படம் அரசியல் காரணங்களுக்காக ஸ்டாலினை முன்னிலைப் படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி இயக்குநர் பா.ரஞ்சித், அமேசான் நிறுவனத்துக்கு அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

உண்மைக்கு மாறான தகவலை திரைப்படக் காட்சியாக சொல்லியிருப்பதாக தெரிவித்துள்ள அவர், படத்தில் வரக்கூடிய குறிப்பிட்ட வசனத்தை உடனடியாக நீக்கி மறுவெளியீடு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நோட்டீஸில் பாபு முருகவேல் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.