கோவையில் வன்முறையை ஏற்படுத்த ரவுடிகள் வரவழைக்கப்பட்டிருப்பதாக இபிஎஸ் குற்றச்சாட்டு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது கோவையில் வன்முறையை ஏற்படுத்த ரவுடிகள் வரவழைக்கப்பட்டிருப்பதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜனநாயக முறைப்படி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது கோவையில் வன்முறையை ஏற்படுத்த ரவுடிகள் வரவழைக்கப்பட்டிருப்பதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜனநாயக முறைப்படி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும் என அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டார். ஆனால், தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாகவும், காவல்துறையை ஏவல்துறையாகவும் திமுக மாற்றிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிக்கப்பட்டு விட்டதாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வினருக்கு நெருக்கடி கொடுத்து தேர்தலில் வெற்றி பெற திமுகவினர் திட்டி உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், கோவையில் குண்டர்கள், ரவடிகளை வைத்து கலவரத்தை ஏற்படுத்த முயற்சி நடைபெறுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, தேர்தலின்போது இதுபோன்ற சூழலை ஏற்படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சாவுமணி அடிப்போம் என கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது உதயநிதி ஸ்டாலின், பகிரங்கமாக பேசுவதாக குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, அவரது இந்த பேச்சை வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்தார். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அதிகாரத்திற்கு வந்துவிட்டு, அதிகார போதையில் அவதூறாக பேசுபவர்கள் தலைவர்களா என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.