முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா கட்டுக்குள் வந்த பின்னர் அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறக்கப்படும்; அமைச்சர் சேகர்பாபு

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பின்னர் அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டபின், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னை மாநகராட்சி 2.0 திட்டத்தின் கீழ் கங்காதீஸ்வரர் கோயில் குளத்தை அழகுபடுத்த உள்ளதாக கூறிய அவர், கோயில் நந்தவனத்தை மேம்படுத்தி பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளதாகவும் தெரிவித்தார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசியது பின்வருமாறு:

”இந்த கோயிலில் 3 கோடி அளவில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. கோயில் நந்தவனத்தை மேம்படுத்தி பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளோம், 50 லட்சம் மதிப்பில் மரத் தேர் உருவாக்க உள்ளோம். கோயில் குளத்தை சென்னை மாநகராட்சி 2.0 திட்டத்தின் கீழ் அழகு படுத்த உள்ளது. கோயில்களுக்கு சமஸ்கிருத பெயர்களுடன் தமிழ் பெயர்களும் சேர்ந்து இடம்பெற முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். கோயில்களில் சமஸ்கிருத பெயர்களுடன் தமிழ் பெயர்களும் சேர்ந்து இடம்பெற முதலமைச்சருடன் ஆலோசனை செய்யப்படும். கண்மூடிதனமாக காரணங்களை உருவாக்கி போராடுகிறார்கள். கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு கோயில்களை திறக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். மேலும் பக்தர்கள் நன்கொடை அளிக்க இணையதளம் திறக்க உள்ளோம்”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

ஹிப் ஹாப் ஆதியின் யூடியூப் சேனல் திடீர் முடக்கம்: ரசிகர்கள் அதிர்ச்சி

Gayathri Venkatesan

சட்டப்பேரவை கூட்டத்தொடரை நேரலையில் ஒளிபரப்புவது பரிசீலனையில் உள்ளது: அப்பாவு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஆர்ச்சர் விலகல்

Saravana Kumar