மாரடைப்பால் நடிகை பெருமாயி உயிரிழப்பு… திரையுலகினர் சோகம்!

இயக்குநர் பாரதிராஜாவின் படங்கள், விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட
முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்த உசிலம்பட்டியைச் சேர்ந்த மூதாட்டி பெருமாயி மாரடைப்பால் உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்தவர் மூதாட்டி பெருமாயி. 73 வயதான இவர் இயக்குநர் பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு சீரியல் மூலம் பிரபலமாகி, பாரதிராஜாவின் பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனின் மனம் கொத்தி பறவை, விஜய்-ன் வில்லு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் 30க்கும் மேற்பட்ட கிராமப்புறம் சார்ந்த திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இறுதியாக நடிகர் பசுபதியின் தண்டட்டி படத்தில் நடித்த இவர் உடல்நலக் குறைவு காரணமாக சமீபகாலமாக திரைப்படங்களில் நடிக்கவில்லை.

இந்நிலையில் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். இவருக்கு ஒரு மகனும், மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ள சூழலில், பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.