நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை காலமானார்! சோகத்தில் திரையுலகம்!

நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை நேற்று காலமான நிலையில் அவருடன் இருந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  லிங்குசாமி இயக்கத்தில் தமிழில் வெளிவந்த ‘ரன்’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டவர் நடிகை…

நடிகை மீரா ஜாஸ்மினின் தந்தை நேற்று காலமான நிலையில் அவருடன் இருந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

லிங்குசாமி இயக்கத்தில் தமிழில் வெளிவந்த ‘ரன்’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டவர் நடிகை மீரா ஜாஸ்மின்.  கேரளாவை சேர்ந்த மீரா ஜாஸ்மின் 2001 ஆம் ஆண்டு வெளியான சூத்திரதாரன் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் பாலா,  புதிய கீதை,  ஆஞ்சநேயா,  ஜூட்,  சண்டக்கோழி,  ஆயுத எழுத்து, மம்மட்டியான் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.  மலையாளம், தெலுங்கு,  கன்னடம் மொழிகளில் இவர் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில்,  83 வயதான மீரா ஜாஸ்மின் தந்தை ஜோசப் பிலிப் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.  மும்பையில் பல வருடங்கள் வசித்த இவர் பின்னர் தனது சொந்த ஊரான எர்ணாகுளத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

மீரா ஜாஸ்மின் தந்தையின் மறைவுக்கு தமிழ் மலையாள திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  அதே சமயம் தந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டால் பக்கத்தில் வெளியிட்டுள்ள மீரா ஜாஸ்மின் மீண்டும் நாம் சந்திக்கும் வரை இந்த புகைப்படங்கள் நினைவில் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.