பாஜகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி; கட்சியில் ஆதரவளிக்க யாரும் இல்லாததால், மிகுந்த மனவேதனையுடன் விலகுவதாக ஆதங்கம்…

தனது சொத்துக்களை ஏமாற்றிய பிரமுகருக்கு பாஜக நிர்வாகிகள் ஆதரவாக இருப்பதால் பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசத்தை கட்டியெழுப்புவதற்காக பாஜகவின் வளர்ச்சிக்கு கடந்த 25…

தனது சொத்துக்களை ஏமாற்றிய பிரமுகருக்கு பாஜக நிர்வாகிகள் ஆதரவாக இருப்பதால் பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேசத்தை கட்டியெழுப்புவதற்காக பாஜகவின் வளர்ச்சிக்கு கடந்த 25 ஆண்டுகளாக நேர்மையாக உழைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

2021 தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் பல்வேறு களப்பணியாற்றியும் தனக்கு பாஜகவில் சீட்டு கொடுக்கப்படவில்லை என்றும் நடிகை கவுதமி தெரிவித்துள்ளார். அழகப்பன் என்பவர் தனது பணம், சொத்து மற்றும் ஆவணங்களை மோசடி செய்தார் என்றும் ஆனால் தனக்கு கட்சி மற்றும் கட்சித் தலைவர்களிடமிருந்து எந்த ஆதரவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே கனத்த இதயத்தோடும் மிகுந்த ஏமாற்றத்தோடும் பாஜகவில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாக நடிகை கவுதமி கூறியுள்ளார். தன் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நெருக்கடியான கட்டத்தில் நிற்பதாக கூறியுள்ள அவர், தனக்கும் தன் குழந்தையின் எதிர்காலத்துக்கும் ஒரு தனிப் பெண்ணாக போராடுவதாக தெரிவித்துள்ளார்
(VGFX OUT)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.