கையில் காயத்துடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராய்!

நடிகை ஐஸ்வர்யா ராய் கையில் காயத்துடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றார்.  பிரான்ஸ் நாட்டில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது.  75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவுக்கு சிறப்பு…

நடிகை ஐஸ்வர்யா ராய் கையில் காயத்துடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றார். 

பிரான்ஸ் நாட்டில் 77-வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது.  75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், பாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரை பல பிரபலங்களும் வருடா வருடம் இவ்விழாவிற்கு சென்று வருகின்றனர்.

தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராய் வருடா வருடம் தவறாமல் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்.  அந்த வகையில் இந்த ஆண்டும் கலந்து கொள்வதற்காக நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன மும்பை விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு கிளம்பி சென்றார்.  அப்போது,  ஐஸ்வர்யா ராய் கையில் கட்டுபோட்டிருந்தார்.  அவருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரபலமாக இருக்கும் சிவப்பு கம்பளம் நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா ராய்,  கையில் காயத்துடன் கலந்து கொண்டார்.  இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.