நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால் மற்றும் அதர்வா ஆகிய 4 பேருக்கும் ரெட் கார்டு வழங்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
சென்னை அண்ணா சாலையில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிம்பு மீதான மைக்கேல் ராயப்பன் பிரச்னையை மேற்கோள்காட்டி சிம்புக்கு ரெட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது சங்க பணத்தை முறையாக கையாளவில்லை என்ற புகார் தொடர்பாகவும், நடிகர் தனுஷ் தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகவும் ரெட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரில் நடிகர் அதர்வா முறையாக பதிலளிக்காததால் ரெட் கார்டு வழங்கப்பட உள்ளது.







