அமேசான் பிரைம் #OTTல் வெளியானது #ActorJivaன் ‘பிளாக்’

ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிளாக் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. ‘ஆசை ஆசையாய்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. தொடர்ந்து, சிவா மனசுல சக்தி,…

ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிளாக் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

‘ஆசை ஆசையாய்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. தொடர்ந்து, சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ் போன்ற காதல் திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கினார். இதனைத் தொடர்ந்து, அதிரடி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்று வந்தன.

இந்நிலையில், பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் ‘பிளாக்’. அறிமுக இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்கள் : “தேசிய இளைஞர் விருது” – எப்படி விண்ணப்பிப்பது ? யார் யார் விண்ணப்பிக்கலாம்? – முழு தகவல் இதோ!

இந்த திரைப்படம் அக்டோபர் 11-ம் தேதி வெளியான நிலையில் ரசிகர்களிடையே படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் இந்த திரைப்படம் ஓடிடி யில் வெளியாகியுள்ளது. பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் தளத்தில் இப்படம் இன்று (நவம்பர் 1) வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.