விஷ்ணு விஷால் நடிக்கும் க்ரைம் திரில்லர் திரைப்படம் “ஆர்யன்”!

புதுமையான திரைக்கதையில், பரப்பாரான திருப்பங்களுடன் உருவாகும் இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர்…

புதுமையான திரைக்கதையில், பரப்பாரான திருப்பங்களுடன் உருவாகும் இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில் உருவாகும் க்ரைம் திரில்லர் திரைப்படமான “ஆர்யன்” படத்தின் பூஜை, படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள எளிமையான முறையில் இனிதே நடைபெற்றது.தமிழ் திரையுலகில் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து, தொடர் வெற்றிகளைத் தந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். புதுமையான திரைக்கதையில், பரப்பாரான திருப்பங்களுடன் உருவாகும் இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் பிரவீன் K இப்படத்தினை இயக்குகிறார்.இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன், கதாநாயகிகளாக நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் சாம் CS இசையமைக்கும் இப்படத்திற்கு விஷ்ணு சுபாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.