நடிகர் விஜய்-யின் ”லியோ” படத்தில் கிரண்..!

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் நடிகை கிரண் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. விஜய்,…

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் நடிகை கிரண் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யாப், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார். லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். இதனால் படத்தின் மற்ற பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கி அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி பல்வேறு அப்டேட்கள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும்படி வந்த வண்ணம் உள்ளது.

இந்த திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் நடிகர் சஞ்சய் தத் பிறந்தநாள் அன்று அவருக்கு பரிசளிக்கும் விதமாக படத்தின் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோவால் தமிழ் திரையுலகமே நடிகர் சஞ்சய் தத் பிறந்தநாளை கொண்டாடியது என்றே கூறலாம்.

அதேபோல் சமீபத்தில், நடிகர் அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோவும், படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை கிரண், லியோ படத்தில் தான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, லியோ படத்தில் பல்வேறு முன்னணி நடிகர்களும், நடிகைகளும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், சிறப்பு தோற்றத்தில் நடிகை கிரண் நடித்துள்ளது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.