‘விலங்கு’ இயக்குநருடன் கைகோர்க்கும் நடிகர் சூரி!

கருடன் வெற்றியைத் தொடர்ந்து ‘விலங்கு’ இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் சூரி அடுத்தடுத்த வெற்றிப்படங்களைக்…

கருடன் வெற்றியைத் தொடர்ந்து ‘விலங்கு’ இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் சூரி அடுத்தடுத்த வெற்றிப்படங்களைக் கொடுத்து வருகிறார். இவர் நடிப்பில் இந்தாண்டு வெளிவந்த கருடன் திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து வரும் 23ஆம் தேதி சூரியின் கொட்டுக்காளி திரைப்படம் வெளியாக உள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படத்தில் நடித்து முடித்துள்ள சூரி தற்போது தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் சூரி,

‘கருடன்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் கே.குமாருடன் இணைகிறேன். இத்திரைப்படத்தை ‘விலங்கு’ இணைய தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார்.  என்றென்றும் உங்களின் அன்பையும், ஆதரவையும் எதிர்நோக்கும், சூரி” என குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்தின் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.