கன்னியாகுமரி சென்ற நடிகர் ரஜினிகாந்த்… ஏன் தெரியுமா?

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நடைபெறும் வேட்டையன் திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்றுள்ளார்.  ஞானவேல் இயக்கத்தில்,  நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 172 வது வேட்டையன்.  இந்த படத்தில் அமிதாப் பச்சன்,  பகத்…

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நடைபெறும் வேட்டையன்
திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்றுள்ளார். 

ஞானவேல் இயக்கத்தில்,  நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 172 வது வேட்டையன்.  இந்த படத்தில் அமிதாப் பச்சன்,  பகத் பாசில்,  மஞ்சு வாரியர்,  ரித்திகா சிங்,  துஷாரா விஜயன்,  ராணா டகுபதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  பெரும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  முதலில் கன்னியாகுமரியில் தொடங்கிய படப்பிடிப்பு அதன்பிறகு கேரளா, மும்பை,  சென்னை ஆகிய பகுதிகளில் நடந்தது.

இந்நிலையில்,  தற்போது படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நடைபெற்று வருகிறது.  படப்பிடிப்புக்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார்.  அங்கே நடிகர் ரஜினிகாந்த்தை காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தனர்.  ரசிகர்களை பார்த்து வணக்கம் கூறிவிட்டு,  காரில் ஏறி கன்னியாகுமரி புறப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.