நடிகர் கவின் தனியார் பள்ளியில் பணிபுரியும் தனது காதலியான மோனிகாவை இன்று திருமணம் செய்துகொண்டார்.
தனியார் தொலைக்காட்சியில் வெளியான நெடுந்தொடர்கள் மூலம் நடிகராக அறிமுகமாவனர் கவின். கவின் நடித்த முதல் படம் லிஃப்ட். இப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகாவிட்டாலும், ஓடிடியில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.
மேலும், சில மாதங்களுக்கு முன்பு கவின் நடித்து வெளியான ‘டாடா’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் வெற்றிக்குப் பிறகு கவின் தனது நீண்டநாள் காதலி டாடா மோனிகாவை கரம்பிடித்துள்ளார்.
கவின் – மோனிகா திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ரசிகர்களும் பிரபலங்களும் கவினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.







