நடிகர் சிரஞ்சீவி பிறந்த நாளை முன்னிட்டு #Indra திரைப்படம் மறுவெளியீடு!

நடிகர் சிரஞ்சீவியின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு 2002ம் ஆண்டு நடித்த தெலுங்கு திரைப்படமான ‘இந்திரா’  தற்போது மறுவெளியீடாகி உள்ளது. தெலுங்கு சினிமாவில் முக்கியமான நடிகளுல் ஒருவர் சிரஞ்சீவி. 2002 ஆம் ஆண்டு பி.கோபாலன் இயக்கத்தில்…

நடிகர் சிரஞ்சீவியின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு 2002ம் ஆண்டு நடித்த தெலுங்கு திரைப்படமான ‘இந்திரா’  தற்போது மறுவெளியீடாகி உள்ளது.

தெலுங்கு சினிமாவில் முக்கியமான நடிகளுல் ஒருவர் சிரஞ்சீவி. 2002 ஆம் ஆண்டு பி.கோபாலன் இயக்கத்தில் வெளியான ‘இந்திரா’  திரைப்படம் தற்போது மறுவெளியீடாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் ஆர்த்தி அகர்வால், சோனாலி நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் வெளியானபோதே ரூ.50 கோடி வசூலித்ததாகவும் தென்னிந்தியாவில் அதிகம் வசூலித்த படையப்பாவின் வசூலை மிஞ்சியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், தமிழகம் உள்பட 385க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிள்ளது.

இதையும் படியுங்கள் : கிருஷ்ணகிரியில் பாலியல் வன்கொடுமை நடந்த தனியார் பள்ளி திறப்பு எப்போது? சிறப்பு விசாரணைக் குழு விளக்கம்!

வைஜெயந்தி மூவிஸ் தயாரித்த இந்த திரைப்படத்துக்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். சிரஞ்சீவியின் சமீபித்திய திரைப்படங்கள் சரியாக வசூலீட்டாத நிலையில் இந்த பழைய திரைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.