‘ஆக்சன் மோட்’ – அரசன் பட அப்டேட் வெளியிட்ட சிலம்பரசன்…!

நடிகர் சிலம்பரசன், அரசன் திரைப்படத்தின் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாபக்கத்தில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார்.

நடிகர் சிலம்பரன் நடிப்பில் உருவாகிவரும் புதிய திரைப்படம் ‘அரசன்’. வெற்றி மாறன் இயக்கும் இப்படம் வடசென்னை யூனிவர்சிஸ் கதை பின்னணியில் அமைகிறது. அனிரூத் இசையமைக்கும் இப்படத்தை எஸ். தானுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

சிம்பு – வெற்றிமாறன் கூட்டணி முதன் முறையாக இணைந்திருப்பதால் இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன், அரசன் படத்தின் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாபக்கத்தில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார். அதில் இயக்குநர் வெற்றி மாறன், நடிகர் சிலம்பரசன் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் அதில் ‘அரசன் இன் ஆக்சன் மோட்’ என பதிவிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.