முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆவின் இனிப்புகளின் விலை உயர்வு

ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் நெருங்கும் நிலையில் பால் கோவா, மைசூர் பாகு உள்ளிட்ட இனிப்புகளின் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

பால் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விரி விதிப்பு காரணமாக ஆவின் தயிர், மோர், லஸ்ஸி, நெய் ஆகிய பொருட்களின் விலை கடந்த ஜூலை மாதம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் குலாப்ஜாமூன், ரசகுல்லா உள்ளிட்ட இனிப்புகளின் விலை உயர்த்தி ஆவின் உத்தரவிட்டுள்ளது. இதன் முழு விவரம்:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

125 கிராம் குலாப்ஜாமூன் ரூ.45 லிருந்து ரூ.50 ஆகவும், 250 கிராம் குலாப்ஜாமூன் ரூ.80 லிருந்து ரூ.100 ஆகவும், 100 கிராம் ரசகுல்லா ரூ.40 லிருந்து ரூ.45 ஆகவும் உயர்ந்துள்ளது.

200 கிராம் ரசுகுல்லா ரூ.80 லிருந்து ரூ.90 ஆகவும், 500 கிராம் பால் கோவா ரூ.210 லிருந்து ரூ.250 ஆகவும் உயர்ந்துள்ளது.

100 கிராம் பால் கோவா ரூ.45 லிருந்து ரூ.50 ஆக உயர்ந்தப்பட்டுள்ளது. 250 கிராம் பால் கோவா ரூ.110 லிருந்து ரூ.130 ஆகவும், 1 கிலோ சர்க்கரை இல்லாத கோவா ரூ.520 லிருந்து ரூ.600 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

500 கிராம் சர்க்கரை இல்லாத கோவா ரூ.260 லிருந்து ரூ.300 ஆகவும், 100 கிராம் மில்க் பேடா ரூ.47 லிருந்து ரூ.55 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

250 கிராம் மில்க் பேடா ரூ.110 லிருந்து ரூ.130 ஆகவும், 500 கிராம் மைசூர்பாகு ரூ.230 லிருந்து ரூ.270 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 250 கிராம் மைசூர்பாகு ரூ.120 லிருந்து ரூ.140 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிபின் ராவத் பயணித்த MI-17V5 ராணுவ ஹெலிகாப்டர் குறித்த முக்கிய தகவல்

Halley Karthik

டுவிட்டர்: வீடியோவில் குளோஸ்டு கேப்சன் வசதி!

Web Editor

தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு; முதலமைச்சர்

G SaravanaKumar