ஆடுஜீவிதம் ஓடிடி ரிலீஸ் எப்போது?… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

பிரித்விராஜ் நடிப்பில் வெளிவந்த ஆடுஜீவிதம் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ், அமலாபால் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆடுஜீவிதம். இத்திரைப்படம் மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவலை (தி கோட்…

பிரித்விராஜ் நடிப்பில் வெளிவந்த ஆடுஜீவிதம் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ், அமலாபால் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆடுஜீவிதம். இத்திரைப்படம் மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவலை (தி கோட் லைஃப்)  தழுவி எடுக்கப்பட்டதாகும். மலையாளத்திலிருந்து தமிழிலும் ஆடு ஜீவிதம் நாவல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பிளஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியிருந்தார். கே.எஸ். சுனில் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் சுமார் 10 ஆண்டுகளின் பணிகளுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், நடிகர் பிருத்விராஜின் நடிப்பும், படத்தின் உருவாக்கமும் பாராட்டுக்களைப் பெற்றன. உலகளவில் முதல் நாளில் ரூ.16 கோடி வசூலித்த இப்படம், ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூலை கடந்து சாதனைப் படைத்தது.
ஆனால், ஆடுஜீவிதம் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதியில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் வரும் ஜூலை 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.