வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைப்பு கட்டாயம் அல்ல: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்!

வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா்எண்ணை இணைப்பது கட்டாயம் அல்ல என உச்சநீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் இணைப்பு கட்டாயம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் படிவத்தில் மாற்றங்கள்…

வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா்எண்ணை இணைப்பது கட்டாயம் அல்ல என உச்சநீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் இணைப்பு கட்டாயம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் படிவத்தில் மாற்றங்கள் செய்யக்கோரி தோதல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு ஜி.நிரஞ்சன் என்பவா் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து பதிலளிக்குமாறு தோதல் ஆணையத்துக்கு கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் ஜெ.பி.பாா்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சுமாா் 66 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள், தங்கள் ஆதாா் எண்ணை வாக்காளா் அடையாள அட்டையுடன் ஏற்கெனவே இணைத்துள்ளனர். ஆதாா் எண் இணைப்பு கட்டாயம் அல்ல.

எனவே, இந்த நோக்கத்துக்காக கொண்டு வரப்பட்ட படிவங்களில் இதைத் தெளிவுபடுத்தும் விதமாக மாற்றங்கள் கொண்டு வரப்படும். என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.