முக்கியச் செய்திகள் தமிழகம்

காங்கேயத்தில் கால்நடைப் பூங்கா அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

காங்கேயத்தில் கால்நடைப் பூங்கா அமைக்கப்படும் என தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி லிங்கம்பாளையத்தில் அவர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், திமுக வீட்டு மக்களுக்காக கட்சி நடத்தி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாடினார். தானும் ஒரு விவசாயி என்பதால், அவர்களது சிரமத்தை உணர்ந்து பயிர்க்கடன் ரத்து செய்யப்படடதாகக் கூறினார். வீடுகள் இல்லாத மக்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என்றும் தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மீண்டும் முதலமைச்சராகி அத்திக்கடவு அவினாசி திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைப்பேன் என கூறினார்.

ொடர்ந்து, பாண்டியன் நகர் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களிடம் மனு வாங்கும் பெட்டியை ஸ்டாலின் திறக்க வாய்ப்பில்லை என்றும், ஏனென்றால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்றும் கூறினார். இன்னும் 10 நாட்களில் 1100 என்ற எண்ணுக்கு அழைத்து குறைகளை தெரிவிக்கும் திட்டம் தொடங்கப்பட இருப்பதாகவும், இந்த எண்ணுக்கு பொதுமக்கள் தங்களது குறைகளை செல்போன் மூலம் தெரிவிக்கலாம் என்றும் அவர் அறிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா.. தடுப்பூசி எடுத்துக் கொள்ள கிரிக்கெட் வீரர் அஸ்வின் மனைவி கோரிக்கை

Halley karthi

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பல்கலை அமைக்க நிதி ஒதுக்கவில்லை: பொன்முடி

Gayathri Venkatesan

கேரளாவிற்கு கடத்த முயன்ற 5000 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் 3 டன் அரிசி பறிமுதல்!

Jeba Arul Robinson

Leave a Reply