A redux of contemporary history from October 31
#Amaranhttps://t.co/WlpgIWG0aw #AmaranDiwali#AmaranOctober31#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamy@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @Rajkumar_KP @gvprakash @anbariv… pic.twitter.com/NinLr9iP5J— Raaj Kamal Films International (@RKFI) August 14, 2024
“போர் செல்லும் வீரன்” – வெளியானது #Amaran படத்தின் மேக்கிங் வீடியோ!
’அமரன்’ படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் இன்று (ஆகஸ்ட் 14) வெளியிட்டுள்ளனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும்…
’அமரன்’ படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் இன்று (ஆகஸ்ட் 14) வெளியிட்டுள்ளனர்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸாகவுள்ளது. இந்த திரைப்படம் சென்னையைச் சேர்ந்த மறைந்த கேப்டன் முகுந்த் வரதராஜனின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் ஏராளமான காட்சிகள் படமாக்கப்பட்டது. அதை பொறுத்துவது போன்ற நிலவியலில் இப்போது இறுதிகட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது.
இந்த நிலையில் நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். ‘India’s Most Fearless’ என்ற புத்தகத்தின் அடிப்படையில் இப்படம் உருவானது என கூறப்படுகிறது.இந்த படத்தில் முதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார் சாய் பல்லவி.இப்படத்திற்கு இசையமைத்திருப்பது ஜி.வி.பிரகாஷ்.‘அயலானின்’ வெற்றிக்கு பிறகு வெளியாகவுள்ள இந்த படத்திற்கு சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.






