இந்தியாவின் அழகான கிராமங்கள் பற்றிய புகைப்பட பதிவை ஆனந்த் மஹிந்திரா ரீட்வீட் செய்து அங்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பயன்பாட்டில் எப்போதுமே ஆக்டிவாக இருக்க கூடிய நபர். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கிட்டத்தட்ட 10.4 மில்லியன் Followers-களை வைத்துள்ளதோடு, அவ்வப்போது நகைச்சுவையான மற்றும் புதிரான விஷயங்களை பகிர்ந்து கொள்வதை வழக்கமாகவும் வைத்திருப்பவர்.
இது தவிர, அவர் பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களையும், படைப்பாற்றல் மற்றும் புதுமைகளுக்காக மக்களை பாராட்டுவதையும் அவரது பல ட்விட்களில் நம்மால் காண முடியும். அத்துடன் எளிய மனிதர்களின் திறமைகளை, கண்டுபிடிப்புகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பாராட்டுகளை தெரிவிப்பார். மேலும், அவர்களுக்கு உதவிகளையும் செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இந்தியாவின் அழகான கிராமங்கள் பற்றிய புகைப்பட பதிவை ரீட்வீட் செய்துள்ளார்.
https://twitter.com/anandmahindra/status/1666729306473758721?s=20
அப்பதிவில், “நம்மைச் சுற்றியிருக்கும் இந்த அழகு என்னைப் வாயடைக்க செய்தது… இந்தியாவில் பயணம் செய்வதற்கான எனது பட்டியல் இப்போது நிரம்பி வழிகிறது….” என்று ஆனந்த் மஹிந்திரா ட்வீட்டில் தனது ஆசையைப் பகிர்ந்துகொண்டார்.







