செப்.16ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 16-ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செப்டம்பர் 16-ம் தேதி காலை 10.30 மணிக்கு திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 18 முதல் 22-ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.







