நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 16 வருடங்கள் தலைமறைவாக இருந்தவரை கைது செய்தது திசையன்விளை காவல்துறையினர்.
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 16 வருடங்கள் தலைமறைவாக இருந்தவரை கைது செய்தது திசையன்விளை காவல்துறையினர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் 1998-ஆம் ஆண்டு அரசு பேருந்தை உடைத்து சேதப்படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பாக திசையன்விளை போலீசார் வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த மைக்கேல் ராஜ் என்பவரை கைது
செய்தனர்.
இந்த வழக்கில் அவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனையும், 10 ஆயிரம்
ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மைக்கேல் ராஜ் உயர்
நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீனில் வெளிவந்தார்.
ஆனால் மைக்கேல் ராஜ் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 16 வருடங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததர். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் படி பிடியாணை பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இந்நிலையில் மைக்கேல் ராஜ்யை திசையன்விளை காவல்துறையினர் தேடிவந்த நிலையில் ஏப்ரல் 25 ஆம் தேதி கைது செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவரை மீடும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.







