குன்னூரில் மலை ரயிலை வழி மறித்த யானை கூட்டம்!

குன்னூரில் மலை ரயிலை யானை கூட்டம் வழிமறித்ததால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சமவெளிப் பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக, 8 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குன்னூர் நோக்கி படையெடுத்து வருகின்றன. குன்னூர்…

குன்னூரில் மலை ரயிலை யானை கூட்டம் வழிமறித்ததால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சமவெளிப் பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக, 8 க்கும் மேற்பட்ட காட்டு
யானைகள் குன்னூர் நோக்கி படையெடுத்து வருகின்றன. குன்னூர் பள்ளத்தாக்கு
பகுதியில் , அவற்றிற்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் உள்ளதால் அவை குட்டிகளுடன் மலைப்பாதையில் உலா வருகின்றன.

இந்த நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் நோக்கி வந்த மலை
ரயிலை, மூன்று காட்டு யானைகள் வழி மறித்தது. இதனால் மலை ரயில் சற்று தூரமாக
நிறுத்தப்பட்டது. மேலும், வனத்துறையினர் யானைகளை விரட்டிய பின்னர்‌ , மலை ரயில்
அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

—கு.பாலமுருகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.