போதிய வகுப்பறை கட்டம் இல்லாத அரசு பள்ளி; திறந்த வெளியில் கல்வி பயிலும் அவலம்…

ஆரணி அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் போதிய வகுப்பறை கட்டம் இல்லாததால், மாணவர்கள் விழா மேடையில் கல்வி பயிலும் சூழல் ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஒண்ணுபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் 300 மாணவர்கள் பயின்று…

ஆரணி அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் போதிய வகுப்பறை கட்டம் இல்லாததால், மாணவர்கள் விழா மேடையில் கல்வி பயிலும் சூழல் ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஒண்ணுபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் 300 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் சில வகுப்பறைகள் சேதமடைந்ததால், மாணவர்கள் திறந்த வெளியில் கல்வி பயிலும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பள்ளி வளாகத்தில் உள்ள விழாமேடை, மற்ற வகுப்பறைகளின் தாழ்வாரப் பகுதியிலும் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படுகிறது. மேலும், பள்ளி கழிவறை சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும், கழிவுநீர் தொட்டியில் இருந்து கழிவுநீர் கசிவதாகவும் புகார் எழுந்துள்ளது.

விரைவாக புதிய வகுப்பறை கட்ட வேண்டும் என்றும், கழிவறைகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.