கேரளாவில் சிலிண்டர் வெடித்து உணவகத்தில் தீ விபத்து!

கேரளா மாநிலம், மலப்புரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. கேரளா மாநிலம், மலப்புரம் திரிக்குளம் அருகே உள்ள சந்திராஸ் ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், ஓட்டல்…

கேரளா மாநிலம், மலப்புரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில்
சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

கேரளா மாநிலம், மலப்புரம் திரிக்குளம் அருகே உள்ள சந்திராஸ் ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், ஓட்டல் முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும், தீ அடுப்பில் இருந்து சிலிண்டருக்கு பரவியதாக தெரிகிறது. இதையடுத்து தீயை அணைக்க முயற்சி செய்தும், தீயை அணைக்க முடியவில்லை.

பின்னர், தனூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்குச் சென்றபோது ஓட்டலில் இருந்த சிலிண்டர் வெடித்து, தீ மளமளவென அருகில் இருந்த தென்னை மரங்களுக்கும், ஹோட்டலில் உள்ள மற்ற சிலிண்டர்களுக்கும் பரவியது. உடனடியாக தீயணைப்பு துறையினர் தீயை அணைத்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.