கோத்தகிரி குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடியை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கோத்தகிரி குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி, தடுப்பு சுவரில் ஏறி வனப்பகுதிக்குள் சென்ற காட்சி வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று லூக்ஸ் தேவாலயம் அருகே குடியிருப்பு பகுதியில் உலா வந்தது. நாய்கள் குறைத்ததால் அச்சமடைந்த கரடி தேவாலயத்தின் அருகே உள்ள 10 அடி உயரம் கொண்ட தடுப்புச் சுவரின் மீது ஏறி அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது.
வனத்துறையினர் கரடிகளின் நடமாட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.







