75வது எம்மி விருதுகள் | ‘தி பியர்’ முதல் ‘பீஃப்’ வரை, வெற்றியாளர்களின் முழு பட்டியல்…!

75வது எம்மி விருது வென்றவர்களின் முழுமையான பட்டியலைப் பார்ப்போம். 75வது பிரைம் டைம் எம்மி விருதுகள் இன்று ஜனவரி 16 (IST) லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. SAG-AFTRA வேலைநிறுத்தம் காரணமாக கிட்டத்தட்ட நான்கு மாதங்கள்…

75வது எம்மி விருது வென்றவர்களின் முழுமையான பட்டியலைப் பார்ப்போம்.

75வது பிரைம் டைம் எம்மி விருதுகள் இன்று ஜனவரி 16 (IST) லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. SAG-AFTRA வேலைநிறுத்தம் காரணமாக கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் தாமதத்திற்குப் பிறகு விருதுகள் விழா நடத்தப்பட்டது. விருது வழங்கும் விழா கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள பீகாக் தியேட்டரில் இருந்து ஒளிபரப்பப்பட்டது.

75-வது எம்மி விருது வென்றவர்களின் பட்டியல்:

  • நகைச்சுவையில் முன்னணி நடிகர் – ஜெர்மி ஆலன் ஒயிட் (தி பியர்)
  • நகைச்சுவைத் தொடரில் முன்னணி நடிகை – குயின்டா புருன்சன் (அபோட் எலிமெண்டரி)
  • துணை நடிகர், நாடகம் – மாத்யூ மக்ஃபேடியன் (சக்செஷன்)
  • நாடகத்தில் துணை நடிகை – ஜெனிபர் கூலிட்ஜ் (தி ஒயிட் லோட்டஸ்)
  • நகைச்சுவைத் தொடரில் துணை நடிகர்- எபோன் மாஸ் (தி பியர்)
  • நகைச்சுவைத் தொடரில் துணை நடிகை- அயோ அடேபிரி (தி பியர்)
  • துணை குறுந்தொடர் நடிகர் – பால் வால்டர் ஹவுசர் (பிளாக் பேர்ட்)
  • துணை குறுந்தொடர் நடிகை – நீசி நாஷ்-பேட்ஸ் (டாஹ்மர் – மான்ஸ்டர்)
  • நகைச்சுவைத் தொடருக்கான சிறந்த எழுத்து – கிறிஸ்டோபர் ஸ்டோர் (தி பியர்)
  • நாடகத் தொடரில் சிறந்த முன்னணி நடிகை – சாரா ஸ்னூக் (சக்செஷன்)
  • நாடகத் தொடரில் சிறந்த நடிகர் – கீரன் கல்கின் (சக்செஷன்)
  • சிறந்த நகைச்சுவைத் தொடர்- (தி பியர்)
  • சிறந்த குறுந்தொடர்- (பீஃப்)
  • ஒரு குறுந் தொடரில் முன்னணி நடிகர் – ஸ்டீவன் யூன், (பீஃப்)
  • லிமிடெட் தொடர் முன்னணி நடிகை – எல்லி வோங், (பீஃப்)
  • சிறந்த ஆவணப்படம் மற்றும் புனைகதை அல்லாத தொடர் – 1619 திட்டம் (ஹுலு)
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.