சென்னையில் 73 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்!

சென்னையில் 73 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக செயின் பறிப்பு, பாலியல் அத்துமீறல், திருட்டு, கொலை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடக்கிறது. இதன் காரணமாகவே சென்னை ஒருங்கிணைந்த காவல்துறையாக இருந்த நிலையில் ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரங்கங்கள் பிரிக்கப்பட்டது.

இதை அடுத்து சென்னை காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் சென்னையில் பல்வேறு குற்ற சம்பவங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே இன்னும் ஒரு ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடக்கநடைபெற உள்ள நிலையில் சென்னை காவல் துறையில் அதிரடி மாற்றம் அரங்கேறி இருக்கிறது. இந்த நிலையில், சென்னையில் 73 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி துரைப்பாக்கம், சாஸ்திரி நகர், ஐஸ் ஹவுஸ், ஐசிஎப், வாஷர்மேன்பேட்டை, புளியந்தோப்பு உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றிய ஆய்வாளர்கள் உள்ளிட்ட 73 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். சட்டம் ஒழுங்கு மட்டுமல்லாது, அனைத்து மகளிர் காவல் நிலையம், க்ரைம், குற்றப்பிரிவு உள்ளிட்ட அனைத்து காவல்துறைகளிலும் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.