சோனியா அகர்வாலின் ’7/ஜி டார்க் ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நடிகை சோனியா அகர்வால்,  ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவாக உள்ள 7/ஜி டார்க் ஸ்டோரி படத்தின் முதல் பார்வைப் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின்…

நடிகை சோனியா அகர்வால்,  ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவாக உள்ள 7/ஜி டார்க் ஸ்டோரி படத்தின் முதல் பார்வைப் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால்.  காதல் கொண்டேன்,  கோயில்,  7 ஜி ரெயின்போ காலனி,  புதுப்பேட்டை,  வானம் மற்றும் பல படங்களில் நடித்திருக்கிறார்.  ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும்,  நடித்த படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் கொடுத்தது.  7ஜி ரெயின்போ காலனியில் அவரின் நடிப்பு இன்றும் அனைவராலும் ரசிக்கப்படுகிறது.

நடிகை சோனியா அகர்வால் , இயக்குநர் செல்வராகவன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  ஆனால், சில ஆண்டுகளுக்கு பிறகு விவகாரத்தில் முடிந்தது. தற்போது  சில படங்களிலும், சின்னத்திரையிலும் சோனியா அகர்வால் நடித்து வருகிறார்.

இந்நிலையில்,  ஹருண் இயக்கத்தில் 7/ஜி டார்க் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் சோனியா அகர்வால் நடிக்கவுள்ளார்.  டிரீம் ஹவுஸ் தயாரிப்பில் உருவாகும்  7/ஜி டார்க் ஸ்டோரி படத்தின் முதல் பார்வைப் போஸ்டரை விஜய் சேதுபதி இன்று வெளியிட்டார்.

https://twitter.com/VijaySethuOffl/status/1742421111068045474

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.