சென்னை விமான நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏ கருணாஸ் கைப்பையில் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்…

சென்னை விமான நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நடிகர் கருணாஸ் சென்னையில் இருந்து திருச்சி செல்ல சென்னை விமான நிலையத்துக்கு இன்று வந்திருந்தார். அப்போது…

சென்னை விமான நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் கருணாஸ் சென்னையில் இருந்து திருச்சி செல்ல சென்னை விமான நிலையத்துக்கு இன்று வந்திருந்தார். அப்போது அவரிடம் இருந்த கைப்பையை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் துப்பாக்கி குண்டுகள் இருந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு வீரர்கள் அவரிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகளை உடனடியாக பறிமுதல் செய்தனர். மேலும் அவரது திருச்சி பயணத்தையும் உடனடியாக ரத்து செய்தனர்.

இந்நிலையில், கருணாஸிடம் துப்பாக்கி குண்டுகள் வந்தது எப்படி என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.