இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
கிங்ஸ்டன் ஓவல் பர்படாசில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், ஷுப்மன் கில் களம் இறங்கினர். இஷான் கிஷன்- 55 ரன்கள் குவித்தார். ஷூப்மன் கில்- 34 ரன்கள் எடுத்தார்.
அடுத்த வந்த வீரர்கள் நிலைத்து நின்று விளையாடததால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் இந்திய அணி 40.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்களை மட்டுமே சேர்த்தது.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் பேட்டிங் செய்ய தொடங்கினர். 36.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி 182 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஷாய் ஹோப் 63, கியாஸி கார்டி , கெயில் மேயர்ஸ் 36 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு வழி வகுத்தனர். 3 நாள் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், இரண்டாவது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.







