உதகையில் நடைபெறும் இரண்டாவது மலர்க்கண்காட்சிக்காக, வண்ணவண்ண மலர்களை அடுக்கி வைக்கும் பணி தொடங்கியது.
உதகையில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இரண்டாவது சீசன் மலர்க்கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நடைபெற உள்ள கண்காட்சிக்காக, 35 ஆயிரம் தொட்டிகளில் பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள், மலர் மாடத்தில் அடுக்கி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த முறை, விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த சந்திராயன் 3 செயற்கைக்கோள் விண்கலம் வடிவமைப்பை புல்வெளி மைதானத்தில் மலர் தொட்டிகளால் அடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.







