சென்னையில் 2-வது விமான நிலையம் – 17-ம் தேதி முடிவு

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் பன்னூரில் அமைய போகிறதா? அல்லது பரந்தூராவில் அமைய போகிறதா? என்பது குறித்து வருகிற 17-ம் தேதி முடிவு எடுக்கப்பட உள்ளது.   இந்தியாவின் தொழில் நகரங்களில் ஒன்றான சென்னையில்…

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் பன்னூரில் அமைய போகிறதா? அல்லது பரந்தூராவில் அமைய போகிறதா? என்பது குறித்து வருகிற 17-ம் தேதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

 

இந்தியாவின் தொழில் நகரங்களில் ஒன்றான சென்னையில் மக்கள் தொகை பெருக்கம், தொழில்துறை வளர்ச்சி காரணமாக உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமானங்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள பன்னாட்டு விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

அதே நேரத்தில், நிர்வாக காரணங்களுக்காக சென்னையில் மேலும் ஒரு விமான நிலையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான இடத்தை பரிந்துரைக்குமாறும் மாநில அரசிடம் மத்திய அரசு கோரி இருந்தது. மேலும் சென்னைக்கு வந்த இந்திய விமான நிலைய ஆணையத்தின் குழு பன்னூர், பரந்தூர், திருப்போரூர், படாளம் ஆகிய 4 இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டது.

 

இந்நிலையில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் எங்கு அமையப்போகிறது என்பதற்கான முடிவு ஜூன் 17 ஆம் தேதி எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெயியாகி உள்ளது. சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமையும் இடத்தை முடிவு செய்யும் ஆலோசனை கூட்டம் ஜூன் 17 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

 

மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராத்ய சிந்தியா தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையிலான குழு பங்கேற்க உள்ளது. இரண்டாவது விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் மாவட்டம் பன்னூர் மற்றும் பரந்தூர் ஆகிய இரண்டு இடங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆலோசனை கூட்டத்தில் இந்த இரண்டு இடங்களில் ஒன்று முடிவான பிறகு, அதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.