27 % ஒதுக்கீடு: முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார் கோ.கருணாநிதி

மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்த்பட்டோர் வகுப்பிற்கு 27% சதவிகித இட ஒதுக்கீடு பெற்றுத் தந்ததற்காக இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் மருத்துவ படிப்பில் இதர…

மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்த்பட்டோர் வகுப்பிற்கு 27% சதவிகித இட ஒதுக்கீடு பெற்றுத் தந்ததற்காக இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்

மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பிற்கு 27% சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்கான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கடந்த மாதம் 7ம் தேதி வெளியிட்டு இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது. இந்தத் தீர்ப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.


அவர் கூறியதாவது,

“மருத்துவ படிப்பில் அகில இந்தியத் தொகுப்புக்கான இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்குப் பல ஆண்டுகளாக மறுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கச் செய்ததுடன், நீதிமன்றத்திலும் திறம்பட எடுத்து உரைத்ததன் காரணமாக, மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டினை உச்ச நீதிமன்றம் 7.1.2022 அன்று வழங்கிய தீர்ப்பின் மூலம் உறுதி செய்துள்ளது.

இந்த தீர்ப்பு தங்களின் தொடர் முயற்சிக்கும், சட்ட போராட்டத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றி எனவும், கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினமன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில், நாடு முழுவதும் சமூக நீதி கொள்கையை முன்னெடுத்து, பிற்படுத்தப்பட்டோர் – பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட அனைத்து சமூகநீதி கூட்டமைப்பு துவங்கப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பினையும், அது தொடர்பாக இந்திய முழுவதும் செயல்பட்டு வரும் அரசியல் கட்சித் தலைவர்களுக்குக் கடிதத்தை அனுப்பி, இக்கூட்டத்தில் இணையுமாறு கேட்டு கொண்டதற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று முதல்வரைச் சந்தித்தோம்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.