கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி, வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு லடாக் நினைவிடத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.
கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தினர் காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் பகுதியில் ஊடுருவினர். இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது. அதிரடி தாக்குதல் நடத்திய இந்திய வீரர்கள் இறுதியாக ஜூலை 26-ந்தேதி, கார்கில் பகுதியை மீண்டும் கைப்பற்றினர். இந்த போரில் பாகிஸ்தானுக்கு பலத்த சேதம் ஏற்பட்ட போதிலும், இந்திய வீரர்கள் 543 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இதனையடுத்து ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் போரில் வீர மரணம் அடைந்த வீர்ரகளுக்கு கார்கில் போர் நினைவகத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மற்றும் முப்படை தலைவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது:
“1999ல், கார்கில் போரில், இந்தியாவை காக்க, ராணுவ வீரர்கள் காட்டிய வீரம், வரலாற்றில் என்றென்றும் பொன் எழுத்துக்களால் எழுதப்படும். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், “போர் என்பது இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே மட்டும் அல்ல.. 1999 ஜூலை 26ல் நடந்த போரில் வெற்றி பெற்ற பிறகும், நமது படைகள் எல்லையை கடக்கவில்லை என்றால், நாம் அமைதியாக இருப்பது தான் காரணம்.
சர்வதேச சட்டத்தின் மீது எங்களுக்கு அர்ப்பணிப்பு உள்ளது, அந்த நேரத்தில் நாம் எல்லையை கடக்கவில்லை என்றால், நாம் எல்லையை கடக்க முடியாது என்று அர்த்தம் இல்லை, நாம் எல்லையை கடக்க முடியும், தேவை ஏற்பட்டால் எதிர்காலத்தில் எல்லைக் கோட்டைக் கடப்போம் எனன்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.







