உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற இருக்கும் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடனான, 15வது சுகாதார மாநாட்டில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்று தமிழ்நாடு அரசின் 14 கோரிக்கைகளை எடுத்துரைக்க உள்ளார்.
சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்களின் தலைமையில், நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர், ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் உத்திரகாண்ட் மாநிலம், டேராடூனில் நடைபெறும் அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடனான, 15வது சுகாதார மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசின் 14 கோரிக்கைகளை எடுத்துரைக்க உள்ளனர்.
அதன் விவரம் வருமாறு;
1. மருத்துவக் கல்வி சேர்க்கை கொள்கை மற்றும் தேசிய தகுதி மற்றும்
நுழைவுத்தேர்விற்கு (நீட்) எதிர்ப்பு,
2.கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க அனுமதி கோருதல்.
3. 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவுதல்.
4. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் புதிய அரசு
செவிலியர் கல்லூரிகள் நிறுவுதல்,
5.மருத்துவ பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங்குமுறை விதிகளுக்கு ஆட்சேபனை,
6. சமீபத்தில் வெளியிடப்பட்ட மருத்துவ பட்டதாரி படிப்புகளுக்கான உத்தேச பொது
கலந்தாய்வுக்கு ஆட்சேபனை,
7.தேசிய மருத்துவ ஆணையத்தின் (மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களை நிறுவுதல், மதிப்பீடு மற்றும் மருத்துவக் கல்விக்கான இடங்களில் அதிகரிப்பு 2023) வரைவுக்கு ஆட்சேபனை பொது மக்களின் கருத்துக்காக சமீபத்தில் வெளியிடப்பட்டது,
8. காலியாக உள்ள அனைத்து இந்திய எம்.பி.பி.எஸ் இடங்கள் மாநிலத்திற்கு ஒப்படைக்கப்படும்.
9. 50 புதிய கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிறுவுதல்.
10.50 புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிறுவுதல்.
11. 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்துதல்.
12. 1000 புதிய நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் நிறுவுதல்.
13. 1000 புதிய கிராமப்புற துணை சுகாதார நிலையங்கள் நிறுவுதல்.
14. சென்னை, இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் கூடுதலாக 100 படுக்கைகள் கொண்ட முக்கிய மருத்துவ சேவைக் கட்டிடம் நிறுவுதல். போன்ற கோரிக்கைகளை மாநாட்டில் எடுத்துரைக்கவுள்ளனர்.








