பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறை காலங்களிலும் தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகின்ற ஆயுத பூஜையை முன்னிட்டும், திபாவளி பண்டிகையை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தமிழன் பார்த்திபன், “ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து 6199 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் தினந்தோறும் 2191 இயக்கப்பட்டு வரும் நிலையில் , 6199 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.05 முதல் நவ.07 வரை 15,659 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
முன்பதிவு செய்யாத மக்கள் எவ்வளவு பேர் வருவார்கள் என்பது கணிக்க முடியாது. மக்களின் கூட்டத்தை குறிக்க இரண்டு இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் காலநிலை பூங்காவில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படும். முடிச்சூர் பகுதிகளில் இருந்து தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். சிறப்பு பேருந்து இயக்க தேவைக்கு அதிகமாக பேருந்துகள் கையிறுப்பில் உள்ளது.
கடந்த ஆட்சியில் தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்து சேவையை செய்துள்ளார்கள் நடைபெற்றுள்ளது. தற்போது அதனை தடுக்க தனி குழு அமைக்கப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் ஆலோசனை கூட்டம நடைபெற உள்ளது இந்த கூட்டத்திற்கு பிறகு பேருந்து கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்” என்று அவர் தெரிவித்தார்.




