பொம்மை காரில் மணிக்கு 148 கிமீ வேகம்! | “பேக் டு தி ஃபியூச்சர்” பார்த்து சாதனை படைத்த மாணவர்!

பொம்மை காரில் மணிக்கு 148 கிமீ வேகத்தை எட்டிய மார்செல் பால் என்ற பொறியியல் மாணவர் உலக சாதனையை படைத்துள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மாணவர் மார்செல் பால்,  ஒரு சிறிய எலெக்ட்ரிக்…

பொம்மை காரில் மணிக்கு 148 கிமீ வேகத்தை எட்டிய மார்செல் பால் என்ற பொறியியல் மாணவர் உலக சாதனையை படைத்துள்ளார்.

ஜெர்மனியைச் சேர்ந்த எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மாணவர் மார்செல் பால்,  ஒரு சிறிய எலெக்ட்ரிக் பொம்மை காரை மாற்றியமைத்து உலக சாதனை படைத்துள்ளார். மார்செல் பாவ் ஜெர்மனியைச் சேர்ந்தவர் மற்றும் ஃபுல்டா யுனிவர்சிட்டி ஆஃப் அப்ளைடு சயின்ஸில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மாணவர் ஆவார்.  இந்த திட்டத்தில் இறங்குவதற்கு முன் பத்து மாதங்கள் ஆராய்ச்சி செய்து உலக சாதனை படைத்தார்.

பேக் டு தி ஃபியூச்சர் என்ற திரைப்படத்தில் டெலோரியனின் நேரப் பயணத்திற்குத் தேவையான “88 mph (141.62 km/h) ஐத் தாண்டுவதே தனது தனிப்பட்ட இலக்கு” என்று GWR இடம் கூறினார்.  GWR பட்டியலில் தனது பெயரைச் சேர்ப்பதற்காக ஒரு மனிதன் சவாரி செய்யக்கூடிய மின்சார காரை மாற்றியமைத்துள்ளார். என குறிப்பிட்டு GWR Instagram இல் பகிர்ந்துள்ளனர்.

 

மாற்றியமைக்கப்பட்ட பொம்மை காரில் ஏறக்குறைய தட்டையாக படுத்துக்கொண்டு மனிதன் சவாரி செய்வதை இந்த வீடியோ காட்டுகிறது.  இந்த வீடியோ வெளியாகி  5.3 லட்சம் பார்வைகளைக் குவித்துள்ளது.  இந்த ஷேர் மேலும் கிட்டத்தட்ட 18,000 லைக்குகளை சேகரித்துள்ளது.  இந்த காணொளிக்கு மக்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.