நிலாவில் கால் வைத்தவர்களில் 11 பேர் சாரண, சாரணியர்-அமைச்சர் அன்பிஸ் மகேஸ்

பாரத சாரண, சாரணியர் இயக்க மாநில தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றினார் சாரண, சாரணியர் இயக்க புரவலரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி. தேசியக்கொடி ஏற்றிய பின் சாரண, சாரணியர்களின்…

பாரத சாரண, சாரணியர் இயக்க மாநில தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றினார் சாரண, சாரணியர் இயக்க புரவலரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

தேசியக்கொடி ஏற்றிய பின் சாரண, சாரணியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், சாரண, சாரணியர் இயக்க மாநிலத் தலைவர் மணி, முதன்மை ஆணையர் இளங்கோவன், மாநில ஆணையர்கள் கண்ணப்பன், ஹரிஷ் மேத்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் உரையாற்றினார். அவர் கூறியதாவது:

சிக்கனமாக, ஒழுக்கமாக, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கு சாரண, சாரணியர்கள் ஓர் உதாரணம். ராணுவக் கட்டுப்பாடுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சாரண, சாரணியருக்கு வாழ்த்துகள்.

நிலாவில் கால் வைத்தவர்களில் 11 பேர் சாரண, சாரணியர் இயக்கத்தை சேர்ந்தவர்கள். ஆரம்ப காலம் முதல் நாட்டுக்காக பாடுபட்ட வீரர்கள், தியாகிகளுக்கு உதவிடும் இயக்கம் தான் திமுக. சாரண, சாரணியர்களுக்கு என்றும் உறுதுணையாக நான் இருப்பேன் என்றார் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.